இந்தியா முழுவதும் கரோனாவின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பல மாநிலங்களிலும் முழு ஊரடங்கு உட்பட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தமிழகத்திலும் மே மாதம் 10ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது. அதன்பின்னர் கரோனாவின் தாக்கம் அதிகரித்த காரணத்தால் மே 24ஆம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டு தற்போது வரை அமலில் உள்ளது. இந்த சமயங்களில் பல ஆதரவற்ற மக்களும், சாலையோர மக்களும் பசியால் வாடி வருகின்றனர்.
அதனை அறிந்த தன்னார்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பசியால் வாடும் ஏழை மக்களைத் தேடித் தேடி உணவுகளையும் தங்களால் முடிந்த அத்தியாவசிய பொருள்களையும் கொடுத்து உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை ஆர்.கே.நகர் 42வது வட்டத்தில் திமுக எம்.எல்.ஏ ஜே.ஜே.எபினேசர் தலைமையில், S.சுந்தர்ராஜன், S.ஜெபதாஸ்பாண்டியன் முன்னிலையில் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் லஷ்மி வேலு, இளைய அருணா ஏற்பாட்டில் 300 பேருக்கு உணவு வழங்கினார். இதில் பகுதி நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/food-prcl-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/food-prcl-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/food-prcl3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/food-prcl-4.jpg)