நிர்மலாதேவிக்கு அரசியல் மிரட்டல்... வழக்கறிஞர் பேட்டி!

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளிடம் தவறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள பேராசிரியர் நிர்மலாதேவி, ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜரான நிர்மலாதேவி கருப்பசாமி ஆகியோரை வரும் 27ம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைதொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தற்போதைய கவர்னர் தமிழகத்தில் இருக்கும் வரை இந்த வழக்கு விசாரணை முடியாது என்று கூறினார்.

ஜாமீனில் வெளியே இருக்கும் நிர்மலா தேவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அரசியல் மிரட்டல்கள் இருப்பதாக தெரிவித்தஅவர், சிறையில் அனுபவித்த தனிமை மற்றும் கொடுமை காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிர்மலா தேவி தற்போது உரிய சிகிச்சைக்கு பின்பு நலமுடன் இருப்பதாகவும் கூறினார். ஏற்கனவே தாங்கள் தாக்கல் செய்துள்ள மனுவின் அடிப்படையில் வரும் 27ஆம் தேதி சார்ஜ் பிரேம் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

வழக்கமாக காரில் வரும் நிர்மலாதேவி இன்று இரு சக்கர வாகனத்தின் தலைக்கவசம் அணிந்து வந்து சென்றார்.

court governor Nirmala Devi Srivilliputhur
இதையும் படியுங்கள்
Subscribe