புதுக்கோட்டையில் குறிப்பிட்ட வழியில் விநாயகர் சிலை ஊர்வலம் எடுத்துச்செல்ல உயர்மநீதிமன்றம் தடை விதித்தருந்த நிலையில் அந்த வழியில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தியே ஆகவேண்டும் என தடுத்து நிறுத்திய போலீசாரை பாஜக தேசியத்தலைவர் எச்.ராஜா சாடியுள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதிவழியில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் அந்த வழியில் நடக்கும் விநாயகர் ஊர்வலத்தில் கலந்துகொண்ட பாஜக தேசிய தலைவர் எச்.ராஜாவிற்கும் அங்கு தடைமீறி வரக்கூடாது என பாதுகாப்பில் இருந்த போலீசாருக்கும் வாக்கு வாதம் முற்றியது. அப்போது காவலர்கள் எல்லாம் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் ஆன்டி இந்தியன்ஸ் என திட்டினார். மேலும் இங்கு உள்ள ஒவ்வொரு இந்துக்களின் வீட்டின் வழியாக கண்டிப்பாக இந்த ஊர்வலம் நடக்கும் முடிந்தால் தடுத்து பாருங்கள்என வன்மையாக காவலர்களிடம் பேசினார். ஆனால் போலீசார் இந்த பகுதியில் ஊர்வலம் நடத்தக்கூடாது என நீதிமன்றம் கூறியுள்ளது என எடுத்து சொல்லியும் அதையும் மீறி அந்த எச்.ராஜா தலைமையில்ஊர்வலம்நடந்தது.