திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் செந்தில்(35). இவர், கடந்த மாதம் 29ஆம் தேதி வடுகப்பட்டிக்கு பாதுகாப்பு பணிக்காக சென்றுள்ளார். வடுகப்பட்டியில் இருந்து உப்பிலியபுரம் பகுதிக்கு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது காவலர்கள் பயன்படுத்தும் வாக்கிடாக்கியை தன்னுடைய இடுப்பில் அணிந்துள்ள பெல்டில் சொருகி கொண்டு சென்றுள்ளார். எதிர்பாராதவிதமாக அது காணாமல் போனது. இதுக்குறித்து உப்பிலியாபுரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
‘வாக்கி டாக்கி’யை தொலைத்த காவலர்!
Advertisment