The policeman who filmed the bath! - The lady of the house next door complained!

ஸ்ரீவில்லிபுத்தூர், வன்னியம்பட்டி, மொட்டமலையில் 11-வது பட்டாலியன் குடியிருப்பில் போலீஸ்காரர் சேகரின் மனைவி கவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தன் குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த போலீஸ்காரர் ஆனந்தும் அங்கே குடியிருக்கிறார். இந்த ஆனந்த் என்ன செய்தாரென்றால், கவி அவருடைய வீட்டிலுள்ள பாத்ரூமில் குளிக்கும்போது, செல்போனில் போட்டோ எடுத்திருக்கிறார். இந்த போட்டோவை வைத்து தப்பான எண்ணத்துடன் மிரட்டவும் செய்திருக்கிறார். இதுகுறித்து வன்னியம்பட்டி காவல்நிலையத்தில் கவி புகாரளித்ததும் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீஸ்காரர் ஆனந்த் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

Advertisment

மக்களைப் பாதுகாக்கும் அரும்பணியை ஆற்றிவரும் போலீஸ்காரர் என்பதில் ஆனந்த் அசட்டையாக இருந்து, வக்கிரம் தலைதூக்கியதால் கவியும் ஒரு போலீஸ்காரரின் மனைவி என்பதைக் கருத்தில்கொள்ளாமல், குளிப்பதைப் படம் பிடித்திருக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது?

Advertisment