ADVERTISEMENT

கரோனாவாக மாறிய காவல்துறை..! தடையை மீறுவோர்க்கு புது ட்ரீட்மெண்ட்..! (படங்கள்)

05:04 PM Mar 28, 2020 | george@nakkheeran.in

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 944 ஆக அதிகரித்துள்ள நிலையில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் அதனைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியதோடு பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியில் வருபவர்கள் மீதும், ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் சாலைகள் காவல்துறையினர் பல நேரங்களில் எச்சரிக்கையும் வழக்குப்பதிவும் செய்துவருகின்றனர்.

ADVERTISEMENT

மேலும், சென்னையில் 144 உத்தரவை மீறி வெளியே வருபவர்களை போலீசார் தாக்குவதாக வந்த செய்திகளை முன்னிட்டு காவல்துறை அதிகாரிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று வில்லிவாக்கத்தை அடுத்த பாடி மேம்பாலத்தில், வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் பாபு, தனது தலையில் கரோனா வைரஸ் போன்று வடிவமைக்கப்பட்ட ஹெல்மெட்டை அணிந்துகொண்டு 144 தடை உத்தரவை மீறி வெளியில் வருபவர்களிடம் கரோனா பரவுதலின் ஆபத்து குறித்தும், வீட்டிலேயே இருக்க வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT