வாகன விபத்தில் காவலர் பரிதாபமாக உயிரிழப்பு!

 policeman tragically passed away in a car accident

சேலம் மாவட்டம் தாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன். இவரது மகன் 40 வயதாகும் ஆறுமுகம். இவர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மதுவிலக்கு பிரிவில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். மே 9 ஆம் தேரி ஏலரைபட்டி கிராமத்திலிருந்துபணியை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனமான ஹோண்டா சைனில் பெங்களூரு டூ சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர்குப்பம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது காட்பாடியில் இருந்து டிவிஎஸ் கம்பெனிக்கு உதிரி பாகங்கள் ஏற்றிக்கொண்டு டாடா ஏசி வாகனம் ஆத்தூர்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அந்த வாகனம் திடீரென ஆறுமுகம் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் அவர் தூக்கி எறியப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய டாட்டா ஏசி வாகன ஓட்டுனர் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்தநாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதல் நிலைக் காவலர் ஆறுமுகத்தின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய டாட்டா ஏசி வாகன ஓட்டுனரை தேடி வருகின்றனர். பணி முடித்துவிட்டு வரும் வழியில் முதல் நிலை காவலர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் போலீசார் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

accident police
இதையும் படியுங்கள்
Subscribe