Policeman killed in cinematic accident!..

சென்னை முகப்பேரில் அதிவேகமாக சென்ற சொகுசு கார் மோதி ஆயுதப்படை காவலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு காவலர் ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisment

சென்னை மாநகர ஆயுதப்படையில் பணியாற்றுபவர்கள் ரவீந்திரன், கார்த்திக். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இருவரும் பட்டாலியன் காவல்படையிலிருந்து ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இருவரும் ஆவடி அடுத்த அன்னனூர் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கோயம்பேடு பேருந்து நிலைய பாதுகாப்பு பணிக்காக இன்று (20.01.2021) அதிகாலை 4 மணிக்குப் புறப்பட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.

Policeman killed in cinematic accident!..

Advertisment

முகப்பேர் அருகே சென்றபோது, அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர்கள்இருவரும் தூக்கி வீசப்பட்டு, காவலர் ரவீந்திரன்சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு காவலர் கார்த்திக் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்தை ஏற்படுத்தியவரை திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைதுசெய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.