/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/8_156.jpg)
திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்தவர் 32 வயதான திருநங்கை. இவர் திருட்டு வழக்கு ஒன்றில் தொடர்புடையதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிறையில் இருக்கும் திருநங்கையிடம் பாதுகாப்புப் பணியில் இருந்த சிறைக்காவலர் மாரீஸ்வரன் என்பவர் அத்துமீறி தினந்தோறும் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மன வேதனையடைந்த திருநங்கை சிறைக்காவலர் தினந்தோறும் கொடுக்கும் பாலியல் தொல்லை குறித்து சிறை கண்காணிப்பாளர், சிறைத்துறை டிஐஜி ஆகியோரிடம் புகார் கூறியுள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிறைக்காவலர் மாரீஸ்வரன் திருநங்கைக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மாரீஸ்வரனை பணியிடை நீக்கம் செய்யப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே தலைமறைவான மாரீஸ்வரனை பிடிக்கத் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், திருச்சி கே.கே.நகர் போலீசார் கைது செய்தனர். பின் அவரிடம் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)