Advertisment

குறுக்கே வந்த நாயால் விபத்தில் சிக்கிய ஆயுதப்படை காவலர்... சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி!

policeman who was involved in an accident with a dog that came across .... CCTV was shocked!

திருச்சியில் ஆயுதப்படை காவலர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் நாய் குறுக்கிட்டதால், நிலைகுலைந்த காவலர் கீழே விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கடந்த 18ஆம் தேதி திருச்சி மாநகர ஆயுதப்படையைச் சேர்ந்த பாசில்கான் என்ற காவலர்மன்னார்புரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். சாலையில் பாசில்கான் வேகமாக சென்றுகொண்டிருந்த நிலையில், சாலையைக் கடக்க முயன்ற நாய் ஒன்று சர்ரென்று சாலையைக் கடக்க, வேகமாக வந்த காலவர் நிலைகுலைந்தார். இதனால் வந்தவேகத்தில் வாகனத்துடன் பாசில்கான் சாலையில் விழுந்தார். தலைக்கவசம் அணிந்திருந்ததால் அவர் உயிர்தப்பினார். இருப்பினும் பலத்த காயமுற்ற பாசில்கான், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisment

police thiruchy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe