Advertisment

சாக்கடையில் துப்பாக்கி... ஓடையில் கத்தி... காவலர் வில்சன் கொலையில் பயன்படுத்திய பொருட்கள் தொடர்ச்சியாக மீட்பு...!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் இரவுப்பணியில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் வில்சன் கடந்த எட்டாம் தேதியன்று கத்தியால் குத்தப்பட்டும், துப்பாக்கியால் சுடப்பட்டும் படுகொலை செய்யப்பட்டார்.

Advertisment

Wilson's case

இந்தியளவிலும் குறிப்பாக போலீசார் மத்தியிலும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்திய படுகொலையில் சம்பவத்தன்று தங்களுக்கு கிடைத்த தடயங்களின் அடிப்படையிலும் சிசிடிவி காட்சிகளின் படியும் கொலையாளிகளைத் தேடிவந்த நிலையில் கேரளா மாநிலம் திருவிதாங்கோட்டு அப்துல் சமீம், கோட்டாறு தவுபிக் ஆகியோர் கொலையாளிகள் என்பது நிரூபணமானது.

இதையடுத்து தமிழகம் மற்றும் கேரளா மாநிலப் போலீசார் இணைந்து விசாரணையையும், தேடுதல் வேட்டையையும் நடத்திய பொழுது கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் இஜாஜ் பாட்சா சிக்கினார். மேற்கண்ட இவரிடமிருந்து வெளிநாட்டு வகை துப்பாக்கி பெற்று சிறப்பு சார்பு ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்படட்டார் என உறுதியான நிலையில் தலைமறைவு குற்றவாளிகள் இருவரும் உடுப்பி ரயில் நிலையத்தில் போலீசாரிடம் சிக்கினர்.

Advertisment

TAG2 ---------------------------

வழக்கு விசாரணைக்காக தடுப்புக் காவலிலுள்ள குற்றவாளிகளான அப்துல் சமீம் , தவுபிக் ஆகியோர் தொடர்ந்து விசாரிக்கப்பட்ட நிலையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் வில்சன் கொலைக்கு தாங்கள் பயன்படுத்திய துப்பாக்கியை எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகே உள்ள கழிவு நீர் ஓடையில் வீசியதாக அடையாளம் காண்பிக்க சில தினங்களுக்கு முன்பு காவல்துறையினர் அந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை திருவனந்தபுரம் சம்பானூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஓடையில் இருந்து காவல்துறையினர் இன்று மீட்டனர். அது மட்டும் இல்லாமல் இந்த பகுதியில் இருந்துதான் குற்றவாளிகள் வெளிமாநிலம் தப்பிச்செல்ல முயன்றனர் என்ற தகவலும் காவல்துறைக்கு கிடைத்துள்ளது.

case police wilson
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe