காவலர்கள் கண்காணிக்கப்படுவர்... தமிழகத்தில் கிரேட் திட்டம் 

police will be monitored..Great project in Tamilnadu

தமிழகத்தில் முதன் முறையாக காவல் நிலையங்களை கண்காணிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

காவல் நிலையங்களில் பொது மக்கள் காத்திருப்பை தடுக்கும் விதமாக தமிழகத்திலேயே முதன் முறையாக மதுரை மாநகர அலுவலகத்தில் கிரேட் எனும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் படி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு உட்பட்ட 25 காவல் நிலையங்களில் கணினி உடன் கூடிய வரவேற்பு அறை உருவாக்கப்பட்டுள்ளது. காவல் நிலையங்களுக்கு வருவோரை வரவேற்க வரவேற்பாளர்களும்பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் காவல் நிலையத்திற்கு வருவோரின் பெயர் முகவரி தேதி நேரம் அவர்களின் செல்பேசி எண் போன்றவற்றை பதிவு செய்து கொள்ளுவர். அவர்கள் கொடுக்கும் புகார்களின் வகை மற்றும் அவர்களின் ஆதார் எண் ஆகியவற்றையும் சேமித்துக் கொள்வார்கள். சேமித்ததை கிரேட் இணைய தளத்தில் பெதிவேற்றம் செய்வார்கள்.

மேலும் காவல் வரவேற்பு அறை முன் ஒலிப்பதிவு உடன் கூடிய 360 சுழற்சி உடைய கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் காவலர்களின் செயல்பாடுகள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும். மேலும் பொதுமக்கள் தொடர்ந்து சரியான முறையில் காவலர்களால் நடத்தப்படுவதையும் உறுதி செய்யும்.

madurai police
இதையும் படியுங்கள்
Subscribe