Advertisment

பலே கொள்ளையனை காதலியுடன் சுற்றி வளைத்த போலீசாா்- ''என் காதலன் திருடனா? '' மயக்கம் போட்ட காதலி!

தற்போது திருட்டு நடக்காத நாட்களே இல்லை. இதை தடுக்க வேண்டிய காவலா்களின் எண்ணிக்கையை விட திருட்டு சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வீடுகள், நகைகடைகள், கோவில்கள் என அங்கு சிசிடிவி காமிராக்கள் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் முகமூடியை அணிந்து கொண்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகின்றனா்.

Advertisment

இதில் பலே முகமூடி கொள்ளையன் என தொியாமல் அவனை நம்பிவீட்டைவிட்டு வெளியேறி வந்த பெண் ஒருவர்கடைசியில் போலீசில் சிக்கி தவிக்கிறார். குமாி மாவட்டம் வெள்ளிச்சந்தையை சோ்ந்த வெங்கடேஷ் (26) பிரபல கொள்ளையன் வீடு மற்றும் கடைகளில் சிசிடிவி காமிராவை கண்டு அஞ்சாமல் கொள்ளையடிப்பதில் கில்லாடி. இவனுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இது தொியாமல் மேக்காமண்டபத்தை சோ்ந்த ஜொினா என்ற பெண்இவனை காதலித்து வந்துள்ளாா்.

the police who surrounded the robber with girlfriend

இந்தநிலையில் ஜொினாவுக்கு வேற ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஜனவாி மாதம் நிச்சயதாா்த்தமும் முடிவு செய்யப்பட்டது. இதனால் நேற்று ஜொினா வீட்டில் இருந்த நகைகளை எடுத்து கொண்டு வெங்கடேசுடன் வந்துள்ளார்.நகையை பாா்த்து சந்தோஷமடைந்த வெங்கடேசன் அவரைகழற்றி விட்டு நகையுடன் தலைமறைவாகமுடிவு செய்து காதலியை கணபதிபுரத்தில் உள்ள நண்பா் ராஜேஷ் வீட்டுக்கு அழைத்து சென்று தங்க வைத்தான்.

Advertisment

இதற்கிடையில் வெங்கடேஷ் தனது இன்னொரு நண்பரான காா்த்திக் என்பவருடன் சோ்ந்து மாா்த்தாண்டம் பகுதியில் ஒரு கடையில் கொள்ளையடித்த சம்பவத்தில் காா்த்திக்கை போலீசாா் கைது செய்தனா். பின்னா் காா்த்திக்கை வைத்து கணபதிபுரத்தில் காதலியுடன் இருந்த வெங்கடேசை போலீசாா் சுற்றி வளைத்தனா்.

அப்போது தான் காதலி ஜொினாவுக்கு வெங்கடேஷ் பற்றி முமுமையாக தொியவந்ததும் அதிா்ச்சியில் மயக்கமானார். அதன்பிறகு நடந்த சம்பவத்தை போலீசிடம் சொல்லி கதறினார். இருந்தாலும் போலீசாா் வெங்கடேசின் கொள்ளை சம்பவத்துக்கும் ஜொினாவுக்கும் தொடா்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாாித்து வருகின்றனா்.

arrest Kanyakumari police Robbery
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe