/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/05_73.jpg)
ஏரியில் ஒருவர் பிணத்தைப்போல் மிதந்து கொண்டிருந்த நிலையில், அவர் இறந்து விட்டார் எனக் கருதி, பொதுமக்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு வேக வேகமாக வந்த போலீசாரும், அந்த நபர் இறந்து விட்டார் என்று நினைத்து, அவருடைய கையைப் பிடித்து ஏரித் தண்ணீரிலிருந்து இழுத்தனர்.
திடீரென்று எழுந்த அந்த நபர், “வெயிலுக்கு இதமாக இங்கே ஏரியில தூங்கிக்கிட்டிருக்கேன். ஏம்பா என்னை டிஸ்டர்ப் பண்றீங்க?” என்று கூலாகக் கேட்க, காவல்துறையினர் நொந்துபோனார்கள்.தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகிலுள்ள உள்ள அனுமகொண்ட பகுதியிலுள்ள ஏரியில் காலை 7 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை ஒருவர் மிதந்துகொண்டிருந்தார்.
இதனைக் கவனித்த அந்தப் பகுதி மக்கள், யாரோ இறந்துபோய் அவருடைய உடல் தண்ணீரில் மிதக்கிறது என்று நினைத்து, காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். காவல்துறையினர் அந்த இடத்துக்குச் சென்றபோதுதான், மிதந்துகொண்டிருந்தது போதை ஆசாமி என்பதும், அவர் தண்ணீரில் தூங்கிக்கொண்டிருந்ததும் தெரியவந்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)