Advertisment

பொதுமக்களிடம் நேரடியாகச் சென்ற காவல்துறை; தி.மலையில் ஒரே நாளில் 600 புகார்கள்

Police went directly to the public; 600 complaints in one day in T. Malai

Advertisment

மக்களுக்கான குறை தீர்வு நாள் கூட்டத்தில் சட்ட ஒழுங்கு கூடுதல் இயக்குநர் சங்கர் கோரிக்கை மனுக்களைப்பெற்றார்.

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் சங்கர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன், துணைத் தலைவர் முத்துசாமி உள்ளிட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 39 சட்ட ஒழுங்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொதுமக்கள் மற்றும் 7 அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொதுமக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட குறைதீர்வு நாள் கூட்டத்தில் மக்கள் தாங்களே கோரிக்கை மனுக்களை காவல்துறை இயக்குநரிடம் அளித்தனர். இந்த குறைதீர்வு நாள் கூட்டத்தில் நில தகராறு, சொத்து தகராறு, கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சனை, அடிதடி தகராறு உள்ளிட்ட பல்வேறு புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

Advertisment

இந்த முகாமில் புதிதாக 450 பொதுமக்கள் புகார் மனுக்களை அளித்துள்ளனர். 150 நபர்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்ட புகாரில் திருப்தி அடையாமல் மீண்டும் புகார் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த முகாமில் பொதுமக்களிடம் மொத்தம் 600 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட இந்த மனுக்கள் அனைத்தும் காவல்துறை உயர் அதிகாரி முன்னிலையில் விசாரணை நடத்தி விரைவில் தீர்வு காணப்படும் எனக் காவல்துறை கூடுதல் இயக்குநர் சங்கர் தெரிவித்தார்.

police thiruvannamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe