Advertisment

காவலாளியை தாக்கியது தவறு - சிம்பு வருத்தம்

simbu

Advertisment

காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திட கோரி போராட்டங்கள் நடத்தி கைது செய்யப்பட்ட பிரபலங்களில், மன்சூர் அலிகான் தற்போது வரை விடுதலை செய்யப்படவில்லை என்பதால் அதைப்பற்றி சிம்பு சென்னை காவல் ஆணையரிடம் விசாரித்தார். அப்போது அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியது.

"காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திடக்கோரி போராட்டங்கள் நடத்திய நடிகர்களும், இயக்குனர்களும் கைது செய்யப்பட்டனர். அப்போது மன்சூர் அலிகான், "அவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். என்னையும் கைது செய்யுங்கள்", என்று கோவமாக பேசியிருக்கிறார். அந்த வீடியோவை நானும்பார்த்தேன்",

"அவரும் சில வார்த்தைகள் தவறாகபேசியிருக்கிறார். நானும் பார்த்தேன். ஆனால் என்ன நோக்கத்தில் காவலர்கள் கைது செய்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அதை முதலில் தெரிந்துகொள்ளதான் நான் இங்கு வந்துள்ளேன்", என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியிருக்கிறார்.

Advertisment

"காவேரி மேலாண்மை போராட்டத்திற்காக அன்று சில பிரச்சனைகள் நடந்தது, அதை சிலர் வன்முறை என்றார்கள். ஆனால், அது வன்முறை அல்ல. அதேபோன்று காவலாளி மீது ஒரு இளைஞன் கைவைத்ததை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்".

style="display:inline-block;width:300px;height:250px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3366670924">

"அந்த காவலாளி நினைத்திருந்தால் , அந்த பையனை அடித்திருக்கலாம் ஆனால் அவர் தன் கடமையை காப்பாற்ற வேண்டும் என்று அமைதியாக இருந்திருக்கிறார். அதற்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்"

"காவலர்களை நான் மதிக்கிறேன். அதனால் தான் இந்த பிரச்சனைக்கு சரியானதீர்வு என்று சொல்வார்கள் என்று நம்புகிறேன். மன்சூர் அலிகானுக்கு கிட்னியில் ஆப்ரேஷன் நடந்திருக்கிறது. அதோடுதான் அவர் அன்று என்னையும் கைது செய்யுங்கள் என்று வந்திருக்கிறார். எல்லோரையும் ஒரே நாளில் விடுதலை செய்யப்பட்டதைபோல்,செய்திருப்பார்கள் என்று நினைத்திருந்தேன், ஆனால் அவர் பையனை தொடர்புகொண்டபோதுதான் தெரிந்தது. அவர் இன்னும்விடுதலை செய்யபடவில்லை இல்லை" என்று.

இவ்வாறு அவர் ஆணையரை சந்திப்பதற்கு முன் தெரிவித்துவிட்டு சென்றார். பிறகு ஆணையரை பார்த்துவிட்டு திரும்பிய சிம்பு, மீண்டும் பத்திரிகையாளர் சந்திப்பில், " நான் இங்கு ஆணையரை வந்து சந்தித்ததற்கு காரணம், உடம்பு முடியாமல் தமிழன் என்கிற உணர்விற்காக வந்து கைது செய்யப்பட்டார் என்பதாலேயே. மனிதனை மனிதனாக மதியுங்கள்", என்றார்.

"எனக்கு அரசியல் தெரியாது", பின்னர் ஓட்டு மட்டும் போடுகிறீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு. "விரல் வைத்தால் போதும்", என்றார். "என்னை நீங்கள் எல்லோரும் அரசியல்வாதியாகவே பார்க்கிறீர்கள். நான் அரசியல் வாதியல்ல, நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு என்னால் சிறப்பாக பதிலளிக்க முடியும். ஆனால், நான் அதற்காக இங்கு வரவில்லை" என்று முடித்துக்கொண்டார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7352774120"

data-ad-format="link">

cauvery maniratnam arrahman simbu str vijaysethupathi aravindswami mansoor alikhan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe