குழந்தைகள் ஆபாசப்படங்களை பார்ப்பவர்களால் குழந்தைகள் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் என்ற அடிப்படையில், அவ்வாறான படங்களை பார்ப்பவர்கள் மற்றும் பதிவேற்றம் செய்பவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை அறிவித்திருந்தது. இதைதொடர்ந்து ஐ.பி. முகவரிகளை வைத்து குழந்தைகள் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்பவர்களை கண்டறியும் முயற்சியில் சைபர் க்ரைம் போலீசார் ஈடுபட்டனர். இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்கள் கைதும் செய்யப்பட்டனர்.

Advertisment

police Warning

கரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவுக்கு இடையே இந்த விவகாரம் பேசப்படாமல் இருந்த நிலையில், தற்போது ஏடிஜிபி ரவி, " குழந்தைகள் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பகிர்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பவர்கள், குடும்ப வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.