குற்றவாளிகளை விசாரணைக்கு அழைத்துச்சென்ற போது விபரீதம்... மருத்துவமனையில் போலீசார் மற்றும் குற்றவாளிகள்..

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தனது சக காவலர்களுடன் இன்று (செப்டம்பர் 23) மதியம் இரண்டு குற்றவாளிகளை கைது செய்து வேலூர்க்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். விசாரணைக்காக சென்றவர்கள் மீண்டும் ஆரணி வரும்போது, வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாதனூர் தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறை வாகனம் விபத்தில் சிக்கியது.

police van accident in aarani

இதில் காவல்நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ் மற்றும் ஓட்டுநர், விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட குற்றம்சாட்டப்பட்ட இருவர் ஆகியோர் காயமடைந்தனர். இதில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அதிக காயம் ஏற்பட்டதையடுத்து உடனடியாக அவர்கள் 108 வாகனம் மூலமாக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காவல்துறை ஆய்வாளர் மற்றும் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் அவர்களும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக ஆம்பூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

thiruvannamalai
இதையும் படியுங்கள்
Subscribe