Advertisment

பாபர் மசூதி இடிப்பு தினம்: தீவிர கண்காணிப்பில் போலீசார்!

டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம். இதனால் நாடு முழக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அதே போல் ஈரோடு மாவட்ட போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisment

  Police under intense surveillance in Erode

பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள 13 சோதனை சாவடிகளில், தொடர்ந்து 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளார்கள். சோதனைச் சாவடிகளுக்கு வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.

இதேபோல் ஈரோடு ரயில் நிலைய நுழைவாயில் ரயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரெயிலுக்கு வரும் பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் கருவியை கொண்டு சோதனை செய்து வருகின்றனர். மேலும் ஈரோடு ரயில் நிலைய ஒவ்வொரு பிளாட்பார்ம்களிலும் போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர். இவ்வாறு முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால், ஈரோடு மாவட்டம் பரபரப்பாக காட்சியளிக்கிறது.

babri masjid Erode police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe