style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்னங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவர் 11 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது மனைவி 35 வயதான குமுதா. தனது மகன் மகள் உடன் பால்னங்குப்பத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது கணவரின் அண்ணன் கேசவன் தரப்பினர் குமுதாவிடம் உள்ள நிலத்தை அபகரிக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளான குமுதா இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அப்போது பணியில் இருந்த எஸ்ஐ மூர்த்தி குமுதாவிடம், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ஆனால் அதற்கு ஒரு கணிசமான தொகை செலவு ஆகும் என கூறி பத்தாயிரம் ரூபாய் பணத்தை கேட்டு உள்ளார். பணம் இல்லை என தனது வறுமை நிலையை கூறியுள்ளார். இதனை பயன்படுத்திக்கொண்ட எஸ்ஐ மூர்த்தி எதிர் தரப்பின் கேசவனிடம் 30ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டு வழக்கை இழுத்து அடித்து வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குமுதா மார்ச் 11 ந்தேதி மீண்டும் புகார் அளிக்க ஜோலார்பேட்டை காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போது எஸ்ஐ மூர்த்தி குமுதாவை அவதூறாக பேசியுள்ளார். இதில் விரக்தி அடைந்த குமுதா வீட்டிற்க்கு வந்து தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். இதைப்பர்த்து குழந்தைகள் கத்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து குமுதாவை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமுதா காப்பாற்றப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.