Advertisment

கோவிலுக்கு வந்த இளைஞரைச் சுற்றி வளைத்த போலீஸ்; ஆம்பூரில் பரபரப்பு

 police took the young man to the temple for questioning

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர்கஸ்பா பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் இன்று ஆம்பூர் நகர்ப்பகுதியில் உள்ள நாகேஸ்வரன் கோவிலில் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்குச் செல்ல பூஜைகள் செய்து இருமுடி கட்டும் வேலைகளைச் செய்து வந்தனர். அங்குகஸ்பா பகுதியைச் சேர்ந்த தளபதி(32) என்பவர் சபரிமலைக்குச் செல்லும் தனது உறவினர்களைக் காண நாகேஸ்வரன் கோவிலுக்கு வந்துள்ளார்.

Advertisment

கோவிலில் இருந்து டீ குடிப்பதற்காக வெளியே வந்தபோது, ஆம்பூரில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வருவதாகக் கூறி தளபதியை ஆம்பூர் நகர காவல்துறையினர் விசாரணைக்காக காவல் நிலையத்துக்குஅழைத்துச் சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த தளபதியின் உறவினர்கள் மற்றும் சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் சிலர் ஆம்பூர் நகர காவல்நிலையத்தை முற்றுகையிட்டு இளைஞரை விடுவிக்கக் கோரி காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

கள்ளச்சாராயம் விற்பதோடு எங்ககிட்ட அகப்படாமல் தலைமறைவா இருந்தா விட்டுவிடுவோமா எனப் போலீஸார் பதில் அளித்தனர். என் மகன் சாராயம் விற்பதை விட்டுட்டான் இப்போ எதுக்கு புடிக்கிறீங்க.அதுவும் கோவிலுக்கு வந்தவனை எதுக்கு புடிக்கிறீங்க என சத்தம் போட்டார் நாகேஸ்வரன் அம்மா.தப்பு பண்ணுவான் கோவிலுக்கு வந்தா புடிக்கக்கூடாதா என போலீஸார் கேள்வி கேட்டதும் அமைதியாகினர். காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கூட்டத்தை போலீஸார் விரட்டியடித்தனர். அதன் பின்னர் சொந்த ஜாமீனில் காவல்துறையினர்தளபதியை விடுவித்தனர். இந்நிகழ்வால் ஆம்பூர் நகர காவல்நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

police TIRUPATTUR
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe