police took action against thiruvaroor BJP district president

திருவாரூர் மாவட்டம், குடவாசக் அருகே உள்ள காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் மதுசூதனன் (42). இவர், அந்த பகுதியில் ஜெராக்ஸ் கடை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும், இவர் முன்னாள் பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளராகவும் இருந்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில், நேற்று முன் தினம் (09-05-24) இரவு, தனது கடை முன்பு மதுசூதனன் இருந்த போது, அங்கு மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்துள்ளனர். மேலும், அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை மதுசூதனனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில், மதுசூதனன் ரத்து வெள்ளத்தில் அந்த இடத்திலேயே கீழே விழுந்துள்ளார். இதனை கண்ட அங்குள்ளவர்கள், உடனடியாக மதுசூதனனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குடவாசல் போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பா.ஜ.க பிரமுகர் ஒருவர் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே, மதுசூதனனின் மனைவி ஹரிணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், ‘தனது கணவர் திருவாரூர் மாவட்ட பா.ஜ.க.வில் நடைபெறும் குளறுபடிகள் குறித்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார். அதில் குறிப்பாக, திருவாரூர் மாவட்ட தலைவர் பாஸ்கருக்கு எதிரான பதிவுகளை பதிவிட்டு வந்தார். எனவே, பாஸ்கர் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் செந்திலரசன் ஆகியோர் பேரில் கூலிப்படையினர் மூலம் கொலை முயற்சி நடந்திருக்கக்கூடும்’ எனத் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

police took action against thiruvaroor BJP district president

அந்த புகாரின் அடிப்படையில், திருவாரூர் பா.ஜ.க மாவட்டத் தலைவர் பாஸ்கர் மற்றும் செந்திலரசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், பாஸ்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பா.ஜ.க பிரமுகர் தாக்கப்பட்ட சம்பவத்தில் பா.ஜ.க பொறுப்பாளரைகைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment