சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவைத் தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

ரப

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதன் உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு அமலில் இருந்தும் சாலைகளில் மக்கள் கூட்டம் காணப்படுகின்றது. இதனைக் கட்டுப்படுத்த காவலர்கள் இரவு பகல் பாராமல் போராடி வரும் வேளையில், காவலர் ஒருவர் வணிகர்களை மிரட்டும் தொனியில் பேசியுள்ள வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்காடியில் நடைபெறும் அந்த உரையாடலில், வணிகர்களிடம் காவலர் ஒருவர் இந்த 144 தடையைப் பற்றி பேசியுள்ளார். அதற்கு அவர்கள் பதில் அளித்துக்கொண்டு இருக்கும் போதே திடீரென ஒருவரை காவலர் கன்னத்தில் அறைகின்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த வணிகர்கள் அவரைத் தள்ளிவிடுகிறார்கள். அப்போது கோபமாக பேசிய காவலர், " உங்களை அடிக்க போலிஸ் தேவையில்ல, நானே எங்க ஊரில் இருந்து ஆட்களைக் கூட்டிவந்து அடிப்பேன்" என்று தெரிவித்துள்ளார். மக்களைக் காக்க வேண்டிய காவலரே இப்படி ரவுடித்தனமாக நடந்துகொண்ட சம்பவம் வணிகர்களைக் கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.