Police threaten SI! Case registered against seven persons!

Advertisment

திருச்சி மாவட்டம், ராம்ஜி நகர் காவல் நிலைய எஸ்.ஐ குமார், எஸ்.எஸ்.ஐ ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். திருச்சி தோகமலை சாலை ஒத்தகடை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, வடகாடு பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜா(34) என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். ஆனால் இதற்கு பாண்டியராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

அவருக்கு ஆதரவாக பிரபு, சேகர், சத்யராஜ், சண்முகம், அவரது மகன், முருகானந்தம் ஆகியோர்கள் திரண்டு போலீசாருடன் வாக்குவாதம் செய்து மிரட்டி உள்ளனர். இதன் காரணமாக எஸ்.ஐ குமார் கொடுத்த புகாரின் பேரில் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.