police taken by action trichy district gun issue

திருச்சியில் உரிமம் இல்லாத துப்பாக்கி வைத்திருந்ததாகஒருவர் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.

Advertisment

திருச்சி உப்பிலியபுரம் மாராடி தேவேந்திரகுல வேளாளர் தெருவைச்சேர்ந்தவர் சக்திவேல் (வயது 30). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஜெயதேவன் என்பவரது தோட்டத்தில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பண்ணை வேலை செய்து வந்தார். இந்நிலையில், சக்திவேல் உரிமம் இல்லாமல் கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பதாக உப்பிலியபுரம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் மோகனுக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் உப்பிலியபுரம் போலீசில் புகார் செய்தார்.

Advertisment

தகவலறிந்த போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் ஜெயதேவன் பண்ணைக்குச் சென்று சோதனை செய்தனர். அப்போது, தோட்டத்து வீட்டில் நாட்டுத் துப்பாக்கியை சக்திவேல் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், 100 கிராம் வெடிமருந்து மற்றும் 30 தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டன. பின்னர், ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சக்திவேலை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.