நேற்று (10.06.2021) வேலூரில் சாராய வேட்டைக்குச் சென்ற போலீசார், சாராய வியாபாரிகளின் வீட்டின் பூட்டை உடைத்து பணத்தையும், நகையையும் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக காவல் எஸ்.ஐ, இரண்டு காவலர்கள் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு கைதும் செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், இதேபோன்ற சம்பவம் சென்னையிலும் நடந்துள்ளது.
சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள தனியார் நகைக் கடைக்கு கடந்த 26ஆம் தேதி சோதனையிடுவதற்காக ஷார்ஜிங், முஜிபுர் ரகுமான் ஆகிய காவலர்கள் சென்றுள்ளனர். அப்போதுயாருக்கும் தெரியாமல் கடையிலிருந்த பணக்கட்டுகளைத் திருடிச் சென்றுள்ளனர். பின்னர் ஐந்து லட்சம் ரூபாய் பணக்கட்டுகள் காணாமல் போனதாக பூக்கடை காவல் நிலையத்தில் நகைக்கடை உரிமையாளர் காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.
இதன் அடிப்படையில்விசாரணை நடத்த ஆணையர் உத்தரவிட்டதை அறிந்தஇரண்டு காவலர்களும், நகைக்கடை உரிமையாளரிடம் பணத்தைத் திருப்பியளித்துள்ளனர். இதை அறிந்த காவல் ஆணையர், சம்பந்தப்பட்ட இரண்டு காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.