
அரியலூர் மாவட்டம் வானதிரையன்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து இவர் திருச்சியில் சிறப்புக் காவல்படையில் காவலராக பணியாற்றி வந்தார். காலையில் வாஷ் பேஷனில் இரத்த கரைகளோடு முத்து தூக்கிட்டு இறந்து கிடந்தார். தனது அறையில் காவலர் முத்து கடிதம் ஒன்று எழுதி வைத்திருந்தாகவும் கூறப்படுகிறது. அந்த கடிதத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.
முத்து இறந்த சம்பவம் குறித்து ஆயுதப்படை காவலர்கள் தரப்பில் விசாரித்தபோது, நேற்று ஸ்ரீரங்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பாதுகாப்பு பணிக்கு முத்து சென்றிருந்தார்.
அப்போது தாய் தந்தை இல்லாத இளம்பெண்ணின் வீடும் இடிக்கப்பட்டது. அந்த பெண் அழுததை தாங்க முடியாமல் நண்பரிகளிடம் முத்து கூறிக் கொண்டிருந்தார். மனிதாபிமானம் இல்லாமல் இருக்கிறோமே? என்று புலம்புி இருக்கிறார்.
இதன் பின் நேற்று அவர் அறைக்கு வரவில்லை. இன்று காலை 7 மணியளவில் நண்பர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் முத்துவை இறக்கி விட்டு சென்றார். அதன்பின் அவர் சாப்பிட வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த நண்பர்கள் வந்து பார்த்தபோது அறையில் தூக்கிட்டு இறந்தது தெரியவந்தது என்கின்றனர். கடிதத்தில் தனது சாவிற்கு யாரும் காரணம் இல்லை என்று முத்து எழுதி வைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.