police suicide

என் சாவுக்கு காரனம் இன்ஸ்பெக்டரும், பெண் எஸ்,ஐ,யும் தான் என தனது கையில் கடிதம் எழுதிவைத்துவிட்டு ஊர்காவல்படை வீரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காரைக்கால் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Advertisment

காரைக்காலை அடுத்துள்ள வரிச்சுக்குடியை சேர்ந்தவர் கண்ணன், அவரது மனைவி தையல்நாயகி,மற்றும் இரண்டு குழந்தைகளோடு அதே பகுதியில் வசித்துவருகிறார். கண்ணன் ஆரம்பத்தில் மருத்துவமனை ஒன்றில் வேலைபார்த்துவந்தபோது வேறு ஒரு பெண்ணோடு தொடர்பில் இருந்ததாக தையல்நாயகிக்கு சந்தேகம்வந்து, அடிக்கடி இருவருக்கு சண்டைவந்திருக்கிறது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இது குறித்து அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார் தையல்நாயகி, அதுகுறித்து விசாரித்திருக்கிறார் எஸ்.எஸ்.ஐ. தனலெட்சுமி, இந்த நிலையில் கண்ணன் வீட்டிற்கு வரவில்லை, பதட்டம் அடைந்த குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த சூழலில் வரிச்சுக்குடியில் அவர் இறந்துகிடப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்து போனார்கள், இறந்துகிடப்பது கண்ணன் தான் என்பதும், அவர் மதுவில் விஷம் கலந்துகுடித்திருப்பதும் தெரியவந்தது. அதோடு என் சாவுக்கு காரனம் இன்ஸ்பெக்டர் மார்த்தினி, மகளிர் ஸ்டேசன் எஸ்.ஐ. தனலெட்சுமி தான் என கையிலும் பேப்பர் ஒன்றிலும் எழுதிவைத்திருந்தார்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இந்த சம்பவத்தால் கண்ணனின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர், பிறகு மாவட்ட எஸ்,பி,வம்சீதரடெட்டி, பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் கண்ணனின் உடலை வாங்கி சென்றனர்.

ஏற்கனவே வேலைபலு, மனஅழுத்தம் காரனமாக போலிஸாரின் தற்கொலை என்னிக்கை தமிழகத்தில் அதிகரித்து வரும் வேலையில், போலிஸாரின் மிரட்டலால் காரைக்காலில் ஒருவர் இறந்திருப்பது அந்தபகுதியில் பரபரப்பாகியுள்ளது.