
தமிழ்நாடு அதிரடிப்படை போலீஸ் பிரிவு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ளது. சந்தன கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்டது தான் இந்த அதிரடிப்படை. வீரப்பன் இறப்புக்கு பின்னரும் சத்தியமங்கலத்தில் அதிரடிப்படை செயல்பட்டு வருகிறது. இதற்கு ஏடிஜிபியாக இருப்பவர் சந்தீப் ராய் ரத்தோர். இவரது மெய்க்காப்பாளராக பணியாற்றியவர் கோபி என்ற போலீசார்.
கடந்த 2006ல் அதிரடிப்படை போலீஸ் பிரிவில், சேர்ந்த கோபி 12 வருடமாக இங்கு பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கோபி நேற்று இரவு அவரது அறைக்கு தூங்க சென்றுள்ளார். இன்று காலை அங்கு பணியில் இருந்த போலீசார் சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்டு இறந்து கிடந்தார்.
தற்கொலை செய்து கொண்ட போலீஸ் கோபிக்கு மனைவி, ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் விருதாச்சலத்தில் வசித்து வருகிறார்கள். போலீஸ் கோபியின் தற்கொலைக்கு மன உளைச்சல் காரணமா? அல்லது பணிச்சுமையா? குடும்ப தகராறா? அல்லது கொலையா என்று அதிரப்படை போலீசார் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.