அரசு ஊழியர்கள் மற்றும் காவலர்கள் லஞ்சம் வாங்குவது தொடர்பான வீடியோ மற்றும் ஆடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிமக்கள் மத்தியில் சர்ச்சையாகி வரும் நிலையில், தற்போது காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் லஞ்சம் வாங்கும் வீடியோ மற்றும் புகாரை வாபஸ் வாங்க வலியுறுத்தும் ஆடியோசமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் கோதண்டராமன். இவர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வருபவர்களைமிரட்டுவதும், புகாரை வாபஸ் வாங்கச் சொல்லுவதும், கட்டப் பஞ்சாயத்து செய்வது மற்றும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதுமாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் காவல் நிலைய வாயில் முன்பு லஞ்சம் வாங்கும் வீடியோ ஒன்றும், புகாரை வாபஸ் பெற வலியுறுத்தும்ஆடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இதனையடுத்துகாஞ்சிபுரம் மாவட்டகாவல் கண்காணிப்பாளர்சுதாகர் , கோதண்டராமனை மாவட்ட ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.மேலும் இது தொடர்பாகத்துறை ரீதியான விசாரணை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் காவல் துறையினர்மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.