Advertisment

இரண்டு குழந்தை திருமணங்களைத் தடுத்து நிறுத்தி காவல்துறையினர் நடவடிக்கை..!

Police stop two child marriages ..!

திருச்சி மாவட்டத்தில் துறையூர் மற்றும் முசிறி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டு குழந்தைகளுக்கு நடக்கவிருந்த திருமணத்தை உரிய நேரத்தில் திருச்சி மாவட்ட காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

Advertisment

24.01.2021 அன்று திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், பச்சமலை கிராமத்தைச் சேர்ந்த 17 வயது குழந்தை,முசிறி வட்டம்உமையாள்புரம் கிராமத்தில் 16 வயதுடைய மற்றொரு குழந்தை என, இரண்டு குழந்தை திருமணங்கள் நடக்க இருந்தது.

Advertisment

இந்நிலையில், மாவட்டக் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு குழுவினரின் தகவலின்பேரில், முசிறி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் டாக்டர். பிரம்மா நந்தா மற்றும் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி ஆகியோர் விரைந்து சென்று சம்பவிடத்தில் நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்தினர். பின் அச்சிறுமிகளைமீட்டு 1098 உதவி மைய கண்காணிப்பாளர் முரளி வசம் ஒப்படைத்தனர்.

Child marriage trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe