/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/aoaoa.jpg)
சென்னை பெரம்பூரில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போக்குவரத்துக் காவலரின் பைக்கை மர்ம நபர் ஒருவர் திருடிச்சென்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பூர் முரசொலிமாறன் மேம்பாலம் அருகே அமைந்துள்ள விநாயகர் கோவில் அருகே சென்னை போக்குவரத்துக் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம். அதுபோல் கடந்த சனிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த இருச்சக்கர வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது, அவ்வண்டியில் இருந்த இருவரும் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.
அவர்கள் இருவரையும் ஓரமாக நிற்கச் சொல்லிவிட்டு மற்ற வாகனங்களை சோதனையிட காவலர் நகர்ந்தபோது, இருவரில் ஒருவர் ஓரமாக நின்றுக்கொண்டிருந்த காவலரின் வாகனத்தில் சாவி இருந்ததைப் பார்த்துவிட்டு காவலரின் வாகனத்தை திருடிச் சென்றுள்ளார். வாகனத்தில் இருந்த மதுபோதை சோதனைக் கருவியையும் திருடிச் சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து போக்குவரத்துக் காவலர், பெரம்பூர் செம்பியம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரை ஏற்ற காவலர்கள் அந்தக் கோவில் அருகே பொறுத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமராக்களை கொண்டு அந்த மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)