கள்ளக்குறிச்சி மாவட்டம்சின்னசேலம்அருகேதெங்கியாநத்தம்கிராமத்தைசேர்ந்த செல்வராணி என்பவர்கூகையூர்கிராமத்தில் கிராம நிர்வாக உதவியாளராக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் வழக்கம்போல் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் தோட்டப்பாடிசாலையில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் கழுத்தில் அணிந்து இருந்த தங்கச்சங்கிலியைபறித்துசென்றதாககூறி அருகில் உள்ளகீழ்குப்பம்காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதேபோல் கடலூர் மாவட்டம்கொரக்கவாடிகிராமத்தைச்சேர்ந்த தீபாதனியார்பள்ளியில் பெற்றோர் சந்திப்புகூட்டத்திற்காககுரால்கூட்ரோடுஅருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த மர்ம நபர்கள் தீபா அணிந்திருந்த 7பவுன் தாலிசெயினைபறித்துச் சென்றுள்ளனர், இதுகுறித்து, அருகில் உள்ளகீழ்குப்பம்காவல் நிலையத்தில் தீபா புகார் அளித்து இருந்தார். இரு வழக்கு சம்பந்தமாக காவல்துறையினர் சம்பவஇடத்திற்குசென்றுசிசிடிவிகாட்சிகளைகைப்பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை செய்ததில் கள்ளக்குறிச்சிஎஸ்பிஅலுவலகத்தில் ஆயுதப்படையில் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த காவலர் விஜயன் என்பவர்தான் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் எனத் தெரியவந்தது, இதனையடுத்து கள்ளக்குறிச்சிடிஎஸ்பிதேவராஜ் தலைமையிலான போலீசார் விஜயனை கைது செய்துகீழ்குப்பம்காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்ற சம்பவம் காவல்துறையினர் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வேலியே பயிரை மேய்வது போன்று பொதுமக்களுக்குபாதுகாப்பாக இருக்கக்கூடிய காவலரே வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு பெண்களின்செயின்களைபறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.