Skip to main content

பேருந்தில் குழந்தைக்கு பால் புகட்டிய பெண்ணிடம் சீண்டல் - காவலருக்கு தர்ம அடி

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Police slapped; at woman who fed baby milk on bus

 

பேருந்தில் குழந்தைக்கு பால் புகட்டியபடி சென்ற பெண்ணிடம் காவலர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டு தர்ம அடி வாங்கிய சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

 

இடுக்கி மாவட்டம் பெருவந்தனம் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் அஜாஸ் மோன். கடந்த சனிக்கிழமை கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து முண்டகாயம் செல்லும் பேருந்து ஒன்றில் காவலர் அஜாஸ் மோன் சென்றுள்ளார். அப்போது பேருந்தில் முன் இருக்கையில் பெண் ஒருவர் தன்னுடைய குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்தார். அப்பெண்ணிடம் ஆபாசமாக பேசியதோடு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

 

இதனால் அதிர்ந்துபோன அந்த பெண் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளார். பேருந்து பொன்குன்னம் என்ற  நிறுத்தத்தில் நின்றதும் அந்த பெண் குழந்தையுடன் இறங்கிக் கொண்டார். அங்கிருந்து வேறு பேருந்தில் பெண் ஏறினார். ஆனாலும் விடாத அந்த காவலர் அந்த பெண் ஏறிய மாற்று பேருந்திலும் ஏறியுள்ளார். இதனால் அதிர்ந்துபோன அப்பெண் உடனடியாக கணவர் மற்றும் அவரது உறவினர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை விவரித்துள்ளார். உடனடியாக கஞ்சிரப்பள்ளி என்ற பகுதியில் பெண்ணின் உறவினர்கள் பேருந்தை மறித்தனர். அவரிடம்  பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலர் அஜால் மோனுக்கு தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விண்வெளி செல்லும் இந்திய வீரர்கள்; பிரதமர் மோடி அறிவிப்பு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Prime Minister Modi's announcement on Indian astronauts in space

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் மோடி இன்று (27-02-24) காலை கேரளா சென்றார். அதனையடுத்து, அவர் அங்குள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்குச் சென்று ககன்யான் திட்டப்பணிகள் குறித்த பணிகளை ஆய்வு செய்தார். அவருடன், கேரளா ஆளுநர் ஆரிஃப் கான், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இருந்தனர். 

இதனையடுத்து, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்குச் செல்லும் 4 வீரர்களைப் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். அதன்படி, குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷுசுக்லா ஆகியோர் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்லவுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு மிஷன் லோகா பேட்ஜ்களை பிரதமர் மோடி வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “தேர்ந்தெடுக்கப்பட்ட 4 விண்வெளி வீரர்களைச் சந்தித்து அவர்களை நாட்டுக்கு அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களுக்கு நாட்டு மக்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய இந்தியாவின் பெருமை நீங்கள் தான்” என்று கூறினார். 

Next Story

இரு பெண் குழந்தைகளுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்த தாய்!

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
 mother jumped in front of a train with two girls

ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் அடுத்த வேலம் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான அறிவழகன். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவரது மனைவி வெண்ணிலா. இந்த தம்பதிகளுக்கு தார்ணிகா(7) ஜெனிஸ்ரீ(5) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். வெண்ணிலாவுக்கு முன்பே விஜயலட்சுமி என்பவரை அறிவழகன் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

அறிவழகன் – விஜயலட்சுமி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் அறிவழகன். சட்டரீதியாக விவாகரத்து கிடைக்கும் முன்பே வெண்ணிலாவை திருமணம் செய்துகொண்டுள்ளார் அறிவழகன்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு விவாகரத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மீண்டும் அறிவழகனுடன் சேர்ந்து வாழ விஜயலட்சுமி வேலம் கிராமத்தில் உள்ள அறிவழகன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது என் வாழ்க்கை, என் பிள்ளைகள் வாழ்க்கை இப்படியாகிடுச்சே என கணவரிடம் சண்டை போட்டுள்ளார். இந்த குடும்ப தகராறு காரணமாக வெண்ணிலா தனது இரண்டு பெண் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு இன்று காலை கிளம்பினார்.

அவர் கோபத்தில் தனது அம்மா வீட்டுக்குத்தான் செல்வார் என அக்கம்பக்கத்தினர் நினைத்தனர். அவர் வாலாஜா ரயில் நிலையத்திற்குச் சென்றவர் காட்பாடி வழியாக சென்னை செல்லும் அதிவிரைவு ரயில் முன்பு  பாய்ந்தனர். இதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்கள்.