தூத்துக்குடி மாவட்டத்தின் விளாத்திகுளம் அருகேயுள்ளசங்கரலிங்கபுரம்காவல் வட்டத்திற்குள் உட்பட்டகுருவார்பட்டிசாலையில்போலீசார்வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அதுசமயம் மதுரையிலிருந்து விளாத்திகுளம் நோக்கி விரைந்துவந்த காரைமறித்துச்சோதனையிட்டனர்.காரினுள்ளேகூண்டு ஒன்றில் பாலூட்டி வகையைச் சேர்ந்த அரிய வகை உயிரினமான 5 தேவாங்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்துகாரில்இருந்தவர்களைப் பிடித்து விசாரித்திருக்கிறார்கள். அவர்கள் விளாத்திகுளம் பக்கமுள்ளமேல்மாந்தைகிராமத்தின் கனகராஜ் மற்றும்வேம்பாரைச்சேர்ந்தகொம்பத்துரைஎன்பதும் தெரிய வந்திருக்கிறது.போலீசார்காரையும் 5 தேவாங்குகளையும் பறிமுதல் செய்து அவர்கள் இருவரையும் சேர்த்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் வனத்துறையினர்விசாரணைமேற்கொண்ட போது தேவாங்குகளை மாந்திரீகம்செய்வதற்காகத்திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து கடத்திக்கொண்டு வந்ததுதெரியவந்திருக்கிறது. விசாரணைக்குப் பின்பு வனச்சரக அதிகாரிகள் அந்த இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தினர். அதன்பின் பறிமுதல் செய்யப்பட்ட ஐந்து தேவாங்குகளையும் பத்திரமாக வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டன. இதுகுறித்து வனத்துறையினர், " இந்த வகைத் தேவாங்குகள் அரிய இனமானது. இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் ஈரப்பகுதி நிறைந்தவனக்காடுகளிலுள்ளமரங்களுக்கு இடையே வாழ்பவை. பாலூட்டி இனம் சார்ந்தவை. இதன் ஒவ்வொரு உடல் உறுப்புகளும் மருத்துவத்திற்காக உபயோகப்படுபவை இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணை வகைகள் மருத்துவத்திற்கும் குறிப்பாக எலும்பு முறிவுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் சிலரோ இதை மாந்திரீகத் தொழிலுக்கும் பயன்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது. விலைமதிப்பு என்பதால் இதனை வேட்டையாடி அதிக விலைக்கும் விற்கப்படுகிறது" என்றனர்.