தமிழகத்தில் காவல்துறை விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.ஐ எழுத்துத்தேர்வு ஜனவரி 11- ஆம் தேதிக்கு பதில் ஜனவரி 13- ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 32 மையங்களில் எஸ்.ஐ எழுத்துத்தேர்வு நடைபெறுகிறது. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுத இருந்தவர்களுக்கான மையம் மதுரவாயல் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு http://tnusrbonline.org/ என்ற இணையதளத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டது.