Advertisment

எஸ்.ஐ கட்டுப்பாட்டில் மனைவி! 3 பெண் பிள்ளைகளுடன் தவிக்கும் கணவன் நல்லக்கண்ணுவிடம் கண்ணீர்!

ra

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருக்கும் கருப்பசாமி, முன்பு கடம்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது குடிநீர் பிரச்சனை தொடர்பாக புகார் அளிக்க வந்தார் மும்மலைப்பட்டியை சேர்ந்த ராமலட்சுமி(37). அவரிடம் செல்போன் எண்ணை கேட்டு வாங்கிய கருப்பசாமி, பேசியே மயக்கிவிட்டார். அந்த பெண்ணுக்கு இப்போது 21, 18 மற்றும் 16 வயதில் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். அப்போது தொடர்ந்த கள்ளக் காதல் இப்போது வரை தொடர்கிறது. தனது மகள்களிடம் உதவி ஆய்வாளர் கருப்பசாமி உறவுக்காரர் என்றும், உங்களுக்கு பெரியப்பா முறை என்றும் அறிமுகம் செய்துள்ளார். அதை 3 பெண் குழந்தைகளும் நம்பி இருக்கின்றனர்.

Advertisment

ராமலட்சுமியின் கணவர் பாலசுப்பிரமணியன் தினக்கூலிப் பணிக்கு கேரளாவுக்கு சென்றுவிடுவார் என்பதால், உதவி காவல் ஆய்வாளர் கருப்பசாமியுடன் ராமலட்சுமி ஊர் சுற்ற கிளம்பிவிடுவார். 3 பிள்ளைகளும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்றுவிடும் என்பதால், அவ்வப்போது வீட்டிற்கே கருப்பசாமி வந்து சென்றார். இதற்கிடையே, உதவி ஆய்வாளரின் மனைவி உடல் நலக்குறைவால் காலமானார். இதனால், இவர்களது நெருக்கம் அதிகமாகிவிட்டது. அரசல் புரசலாக கள்ளக் காதல் விவகாரம் ஊருக்குள் தெரியவர, 3 மாதங்களுக்கு முன்னர் மாயமாகிவிட்டார் ராமலட்சுமி. இதுதொடர்பாக எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார் பாலசுப்பிரமணியன். அதில், "உதவி காவல் ஆய்வாளர் கருப்பசாமியின் பிடியில் இருந்து மனைவி ராமலட்சுமியை மீட்டுத் தர வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக புளியம்பட்டி போலீஸார் விசாரித்து அறிக்கை அளிக்க எஸ்.பி உத்தரவிட்டார். புளியம்பட்டி போலீஸாரும் விசாரணைக்கு கருப்பசாமியையும், ராமலட்சுமியையும் அழைத்தனர். கடந்த வாரம் இருவரும் ஒரே காரில் வந்து இறங்கி உள்ளனர்.

Advertisment

ll

பின்னர் விசாரணையின்போது, "நான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. என் மீது கணவர் சந்தேகப்பட்டதால், என் அம்மா வீட்டில் கேரளா மாநிலம் மூணாறில் தங்கி இருக்கிறேன்" என்று சொல்லிவிட்டு ராமலட்சுமி புறப்பட்டு சென்றுவிட்டார். ஆனால், தனது மனைவியை நயவஞ்சமாக பேசி வீழ்த்தி, கருப்பசாமி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்று பாலசுப்பிரமணியன் புலம்பி வருகிறார்.

இன்று கொடியன்குளம் பகுதியில் காற்றாலை நிறுவன ஆக்கிரமிப்புகளை பார்வையிட வந்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவையும் பாலசுப்பிரமணியன் சந்தித்து கண்ணீருடன் கோரிக்கை மனு ஒன்று அளித்தார். அடுத்த கட்டமாக காவல்துறையை கண்டித்து போராட்டம் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர் தோழர்கள்..!

ramalakshmi cpm nallakannu police si
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe