தூத்துக்குடியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குடும்பத்திற்கு போலீசார் தொல்லை தரக்கூடாது: உயர்நீதிமன்றம்

தூத்துக்குடி போராட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தொல்லை தரக்கூடாது என போலீசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்ட மக்கள் அதிகார அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தங்கமணி, மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டத்தில் கலந்து கொண்ட 1000க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்களை விசாரணைக்கு அழைக்கும் பொருட்டு அவருக்கு முறையாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஆனால் போலீசார் விசாரணை என்ற பெயரில் போராடியவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், குழந்தைகளை கூட விடாமல் நள்ளிரவு நேரம் வீடு புகுந்து துன்புறுத்துகின்றனர்.

dc cover

போலீசாரின் இந்த மனிதாபிமானமற்ற தொந்தரவின் காரணமாக அந்த குடும்பத்தினர் மன உளைச்சலில் உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக யாரையும் கைதுசெய்யக்கூடாது, துன்புறுத்தக்கூடாது, எத்தனை பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என அவர் கூறியிருந்தார்.

இந்நநிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் குற்றம்சாட்டப்பட்டோரின் குடும்பத்தினரை விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவிட்டனர்.

Sterlite
இதையும் படியுங்கள்
Subscribe