சென்னை விருகம்பாக்கத்தில் கேரள போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் பணமோசடியில் ஈடுபட்ட மகாராஜன் சென்னை விருகம்பாக்கத்தில் தலைமறைவாக இருந்துள்ளார். கேரள போலீசார் இவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்ய முற்பட்டபோது, மகாராஜன் உறவினர்கள் அவரை கைது செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இதனால் மகாராஜன் தப்பித்துவிடுவார் என்று வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதால் விருகம்பாக்கம்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gun_3.jpg)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)