Advertisment

“போலீஸ் என் புடவையை உருவி அடிச்சாங்க..”;கதறும் தாய் - நெஞ்சை உலுக்கும் சம்பவம்

police severely beaten the person who took him for questioning In Pudukkottai

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகாவில் கடந்த 9 ஆம் தேதி முகமூடி அணிந்த 3 பேர் கொண்ட ஒரு கும்பல் ஒரு பெண்ணை தாக்கி தங்க நகைகளை பறித்துக் கொண்டு செல்ல, அந்தச் சம்பவம் குறித்த புகார் மணமேல்குடி காவல் நிலையம் வந்துள்ளது. புகார் கொடுத்தவர்களே சில சந்தேக நபர்களையும் அடையாளம் சொல்ல போலிசார் விச்சூர் அருகே உள்ள அம்மாபட்டினம் அஞ்சல் ஆதிபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த ரவி மகன் பாண்டியன் மற்றும் அவரது 17 வயது கூட்டாளியை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் விசாரணையில் நகைகள் கிடைக்கவில்லை.

சில நாட்கள் வரை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் வீடும் திரும்பவில்லை. சிறைக்கும் அனுப்பவில்லை என்பதால் பாண்டியனின் தாயார் காளியம்மாள் மணமேல்குடி, மீமிசல் காவல் நிலையங்களுக்கு சென்று விசாரித்துள்ளார். ஆனால் அங்கே இல்லை என்று போலிசார் கூறியுள்ளனர். அதே நேரத்தில் திருட்டு போன நகை பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. போலீசார் அழைத்துச் சென்ற தன் மகனை காணவில்லை என மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியதுடன், நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். மேலும், வட்ட சட்டப்பணிகள் குழுவிலும், மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனு கொடுத்திருந்தார்.

இந்த நிலையில்.. கடந்த 18 ஆம் தேதி கொள்ளுவயல் ஆற்றுப்பாலம் அருகே, 1.150 கிலோ கிராம் கஞ்சாவுடன் பாண்டியன் வந்ததாக, கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், ரேக்ளா பந்தயம் பார்க்கப் போன இடத்தில் பாண்டியனுக்கு காயமடைந்துள்ளதாக வாக்குமூலம் பதிவு செய்து மருத்துவச் சான்றும் பெற்று, நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தி உள்ளனர். நீதிமன்ற சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், புதுக்கோட்டை சிறை நிர்வாகம் காயத்துடன் உள்ளவரை சிறையில் வைக்க முடியாது என்று புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டனர். மருத்துவமனையில் சேர்த்த பிறகு, மருத்துவர்கள் செய்த சோதனையில் பாண்டியனின் பின்புறம் இரு பக்கமும் பலத்த காயம் ஏற்பட்டு, இதனால் உப்பின் அளவு அதிகரித்து சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிஸ் செய்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் தான் போலிசார் விசாரணைஎன்ற பெயரில் தன் மகனை உணவு, தண்ணீர் கொடுக்காமல் அடித்ததால் சிறுநீரகம் வரை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் என் மகன் உயிரைக் காப்பாற்ற உயர் சிகிச்சை அளிக்க வேண்டும், என்மகனை தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலைக்கு தள்ளிய போலிசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் வழக்கரிஞர் அலாவுதீன் மூலம் மனு கொடுத்தார். இது குறித்த செய்தி நக்கீரன் இணையத்தில் செய்தி மற்றும் வீடியோ வெளியான நிலையில், தீவிர சிகிச்சை தொடங்கி நடந்து வருகிறது. தற்போது நீதிமன்றத்தையும் நாடியுள்ளார். இந்த நிலையில் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் பாண்டியன் மற்றும் அவருக்குத்துணையாக உள்ள அவரது அம்மா காளியம்மாள் ஆகியோர் நம்மிடம் பேசினர்.

அந்தப் பேட்டியில் நம்மிடம் மருத்துவமனையில் இருந்தபடி பேசிய பாண்டியன், “சார் பச்சைத் தண்ணி கூட குடுக்காமல் அடிச்சாங்க சார்.. ஒரு இடத்துல தண்ணி ஊத்துவிட்டு அதாவது சாராயத்தை ஊத்திவிட்டு என்னை அடித்தார்கள்.. என அவர் கூறும்போது கண்களில் நீர் கோர்த்து முகம் ஆதங்கத்தில் கொப்பளித்தது. பாண்டியனின் அம்மா கூறும்போது,நகையை காணும் என போலீசார் என்னிடம் வந்து என் புடவையை உருவினார்கள்.நகையை நான் மறைத்து வைத்துள்ளேன் எனச் சொல்லி என்னை அடித்தார்கள்,என் மகனை திருட அனுப்பினேன் என ஏசினார்கள். என் மகனை நான் அப்படி வளர்க்கல ஐயா எனச் சொன்னேன்.என் முகத்தில் காரி துப்பிவிட்டு சென்றார்கள்.என்றார் வேதனை படிந்த குரலில்.

சாத்தன்குளம் போலவே புதுக்கோட்டை மணமேல்குடி சம்பவம் நடந்துள்ளதாகக் கூறும் மனித உரிமை ஆர்வலர்கள் உரிய விசாரணைவேண்டும் என்கின்றனர்.

pudukkottai police woman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe