Published on 05/06/2021 | Edited on 05/06/2021

தமிழ்நாட்டில் வருகிற ஜூன் 14ஆம் தேதிவரை மதுக்கடைகள் திறக்கப்படாது என்ற அறிவிப்பு மது பிரியர்களுக்குப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து மது பாட்டில்களை சட்டவிரோதமாக கொண்டுவந்து தமிழகத்தில் விற்பனை செய்யும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
அதில், இன்று (05.06.2021) அதிகாலை 3 மணியளவில் வந்த மைசூர் எக்ஸ்பிரஸில் குளிர்சாதனப் பெட்டியில் பயணித்த திருச்சி பொன் நகர் பகுதியைச் சேர்ந்த தங்கராசு என்பவரின் உடைமைகளை சோதனையிட்டனர். அப்போது அதில் பெங்களூரு மாநிலத்திலிருந்து 30 மதுபாட்டில்கள் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. எனவே மது பாட்டில்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.