Advertisment

தேவையில்லாமல் வெளியே வரும் வாகனங்களை பறிமுதல் செய்யும் காவல்துறையினர்..! (படங்கள்)

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையின் பரவல் அதிகமாக இருப்பதால் 10.05.2021 முதல் 24.05.2021 வரை சில கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையகூடாது என்ற நோக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அவ்வாறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், அவசிய தேவைகள் தவிர்த்து வேறு எப்போதும் வெளியே வரக்கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டது.

Advertisment

மக்களின் அசாதாரண போக்கைத் தடுக்கும் நோக்கத்தில் ஆங்காங்கே கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன. இவ்வளவு கடுமையான சூழலிலும் கரோனாவின் பாதிப்பை முழுவதும் உணராமல், பொது ஊரடங்கு காலத்திலும் பொதுமக்கள் இயல்பாக செயல்படுகின்றனர். அந்தவகையில், சென்னை ஈ.வே.ரா பெரியார் சாலையில் அதிகமாக வாகனங்கள் சென்றதால் காவல்துறையினர் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி, தகுந்த ஆதாரங்களுடன் வந்த வாகனங்களை மட்டும் அனுமதித்தனர். மற்ற வாகனங்களைப் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்தனர்.

Advertisment

vehicles Seized police Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe