Published on 08/01/2022 | Edited on 08/01/2022

தஞ்சை மாவட்டம், அரண்மனை மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை சிலர் பதுக்கிவைத்திருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து அரண்மனை மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவலர்கள் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். இதில், அப்துல் லத்தீப் என்பவருக்கு சொந்தமான குடோனில் 300 மூட்டைகளில் குட்கா, புகையிலை உள்ளிட்ட பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட அந்த மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய ஜவகர் பாட்சா, ஆனந்தகுமார், லோகநாதன், கார்த்திக் உள்ளிட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.