Advertisment

பெண்ணுக்கு நேர்ந்த தொடர் கொடுமை; பாலியல் குற்றவாளிகளை தேடும் காவல்துறை

Police searching for two in woman case near viluppuram

Advertisment

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியைச் சேர்ந்தவர் மது (40 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், அவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வந்து தனியாக தன் பிள்ளைகளுடன் கோட்டக்குப்பம் சின்ன முதலியார் சாவடி பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் பணியாளராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், அந்த பெண்ணுக்கும் புதுச்சேரி காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கும் அறிமுகமாகி, இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இது நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது. சம்பவத்தன்று அந்த ஆண் நண்பரும்மதுவும்மரக்காணம் அருகில் உள்ள ஒரு தைல மரத்தோப்புக்குள் சென்று இருவரும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். இவர்களை நோட்டமிட்ட மரக்காணம் பகுதியைச் சேர்ந்த எழில் பரதன் மற்றும் அவரது நண்பர் ஒருவர் என இருவரும் அங்கு சென்று, அந்தப் பெண்ணின் ஆண் நண்பரை கத்தியை காட்டி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விரட்டியுள்ளனர்.

பின், மது அந்த இருவரிடமும் தனியாக சிக்கிக் கொண்டிருக்கிறார். அதன்பிறகு அவர்கள் இருவரும் மதுவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தை வெளியே சொன்னால் அவரையும், அவரது குழந்தைகளையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர். தொடர்ந்து அவரிடம் அவ்வப்பொழுது இப்படி மிரட்டிபாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.

Advertisment

ஒரு கட்டத்திற்கு மேல், எழில் பரதனும் அவரது நண்பரும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக எடுத்துள்ளனர். மேலும், அந்த வீடியோவை காண்பித்து அவரை தொடர்ந்து வன்கொடுமைசெய்து வந்துள்ளனர். மேலும், அந்த வீடியோவை காட்டி பணம் கேட்டும் மிரட்டியுள்ளனர். ஏழைப் பெண்ணான அவரால் அவர்கள் கேட்ட பணத்தை கொடுக்க முடியாமல் போக எழில் பரதன், அந்த வீடியோவை வாட்ஸ்ஆப்பில் குழுவில் வெளியிட்டுள்ளார். இதை அறிந்த மது, கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து எழில் பரதன் மற்றும் அவரது நண்பரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

police Viluppuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe