
பள்ளி மாணவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டதுகுளச்சலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அடுத்துள்ள ஆலங்கோடு பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர் ஒருவர் கடந்த மாதம் 14 ஆம் தேதி சிறுநீர் கழிக்க பள்ளியின் கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்பொழுது அங்கு வந்த இயற்பியல் ஆசிரியர் அருள் ஜீவன் என்பவர் மாணவரைஆய்வகத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அச்சிறுவன் தங்களது பெற்றோர்களிடம் தெரிவிக்கப்பெற்றோர்கள் குளச்சல் போலீசில் புகாரளித்துள்ளனர்.
பத்மநாபபுரத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுவனிடம் போலீசார் நேரடியாக விசாரணை நடத்தினர். நடத்தப்பட்ட விசாரணையில் ஆசிரியர் அருள் ஜீவன் பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆசிரியர் அருள் ஜீவன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தற்பொழுது தலைமறைவான அந்த இயற்பியல் ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர். பள்ளி நிர்வாகமும் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
Follow Us