Advertisment

காணாமல் போன ஆசிரியையை மீட்டு தாயிடம் ஒப்படைத்த போக்குவரத்து  போலீஸ் இன்ஸ்பெக்டர் !!  

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் வீட்டில் இருந்து திடீரென மாயமானார் - மாயமான ஆசிரியையை அவரது தாயார் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் உளுந்தூர்பேட்டை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பண்டை ராஜ் அவர்களை உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடி அருகே வாகன தணிக்கையின் போது சந்தித்து தனது மகள் காணாமல் போனது குறித்து மன வேதனையுடன் தெரிவித்தார்.

Advertisment

police saves teacher

தொடர்ந்து நேற்று பகல் பொழுது முழுவதும் இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தலின் பேரில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் பல இடங்களில் தேடினார்கள்.

மாலை 4 மணி அளவில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு எண் 3 போலீசார் காணாமல் போன ஆசிரியையை அரசூர் அருகே மீட்டனர். இதனையடுத்து அவரது தாயாரிடம் ஆசிரியையை போலீசார் நேற்று மாலை ஒப்படைத்தனர்.

தனது மகளை மீட்டு கொடுத்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அப்பண்டை ராஜ் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு எண்3 போலீசாருக்கு அவரது தாயார் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

police Tamilnadu teacher
இதையும் படியுங்கள்
Subscribe