Police return overloaded cows

Advertisment

ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு விற்பனைக்காகவும் இறைச்சிக்காகச் சென்ற மாடுகளை தமிழக காவல்துறை தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பியுள்ளது.

ஆந்திராவில் இருந்து குடியாத்தம் வழியாக கேரளாவிற்கு விற்பனைக்காகவும், இறைச்சிக்காகவும் லாரிகள், மினி வேன்கள் மூலம் அதிக அளவில் மாடுகள் ஏற்றிச் செல்கின்றனர். இந்த நிலையில் அப்படி அதிகளவில் மாடுகளை ஏற்றி வரும் வாகனங்களை சைனகுண்டா சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தி குடியாத்த தாலுகா போலீசார் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

மேலும் குறிப்பிட்ட அளவிலான மாடுகளையே வாகனங்களில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிக அளவில் ஏற்றப்பட்டு வரும் வாகனங்களை தமிழகத்தில் எல்லைக்குள் நுழைய விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பி வருகின்றனர்.