Advertisment

தனிமையில் தவித்த குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்த போலீஸ்

police rescued the lonely child and handed him over to his mother

மணப்பாறை பேருந்து நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு சுமார் ஒன்றரை வயது மதிக்கதக்க பெண் குழந்தை ஒன்று யாரும் இல்லாமல் தனியாக நின்று வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ச.பலகிருத்திகா தலைமையிலான போலீசார் தனித்து நின்ற குழந்தையை மீட்டு காவல் நிலையம் கொன்று சென்றனர். இதனைத் தொடர்ந்து பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து குழந்தையின் உறவினர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

Advertisment

இந்த நிலையில்தான் நொச்சிமேடு பகுதியில் சாலையில் மயங்கி விழுநது,ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணின்குழந்தை போன்று இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அங்கே சென்ற போலீசார் அந்த பெண் குறித்து விசாரணை நடத்தினர்.

Advertisment

அதில், சோனாலி(26) என்கிற பெண்,இந்த பெண் குழந்தையின் தாய் என்பதும், மகராஷ்டிரமாநிலம் நாசிக் பகுதியை சேர்ந்தவர் என்றும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் நேற்று தாய் - சேய் இருவரையும்திருச்சி மன்னார்புரத்தில் இயங்கி வரும் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைத்தனர்.

trichy child police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe