/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2735.jpg)
திருச்சிக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் ரயில்கள் வந்துசெல்லும். அதன்படி நேற்று வட மாநிலத்தில் இருந்து, திருச்சி வந்த ஒரு ரெயிலில் மூன்று சிறுவர்கள் தனியாக பயணித்துள்ளனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த ரயில்வே காவலர்கள் அவர்களை விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலத்தில் இருந்து திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனம் ஒன்றில் வேலை செய்வதற்காக வந்ததாக தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அச்சிறுவர்களை மீட்ட ரயில்வே காவல்துறையினர், திருச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், ரயில்வே காவலர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அச்சிறுவர்கள் தாங்களாக வந்தனரா அல்லது நிறுவனம் தரப்பில் இருந்து அழைத்துவரப்பட்டனரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை செய்துவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)