Advertisment

மாயமான குழந்தையை மீட்டுக் கொடுத்த காவலருக்கு குவியும் பாராட்டுகள்

police for rescue the missing child

Advertisment

மருத்துவமனையில் தாயிடம் இருந்துமாயமான முதல் குழந்தையை பத்திரமாகமீட்டுக் கொடுத்த காவலருக்குபாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கோவை மாவட்டம் சங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். 24 வயதான இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ருக்மணி. இந்த தம்பதிக்கு சித்தார்த் என்கிற 4 வயது ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று ருக்மணி தனது இரண்டாவது பிரசவத்திற்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போதுஅவரது மூத்த மகன் சித்தார்த்தும் உடனிருந்தார்.

இதையடுத்துமகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ருக்மணிக்கு இரண்டாவது முறையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த சமயம், குழந்தை பிறந்த செய்தியறிந்த பெற்றோரும்உறவினர்களும் மகிழ்ச்சியில் திளைத்த நேரத்தில்மணிகண்டன் - ருக்மணி தம்பதியின் மூத்த மகன் சித்தார்த் திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன்தன்னுடைய உறவினர்களை அழைத்துக் கொண்டுமகன் சித்தார்த்தை மருத்துவமனை முழுவதுமாக தேடி அலைந்துள்ளனர். அப்போதுஅந்த மருத்துவமனையில் பாதுகாப்புப் பணியில் இருந்த முதல்நிலைகாவலர் ஸ்ரீதர் என்பவர்மெயின்ரோட்டில் நின்று கொண்டிருந்த சித்தார்த்திடம் பேச்சுகொடுத்துள்ளார்.

Advertisment

இதைத் தொடர்ந்து, அந்த சிறுவன் தன்னை முழுமையாக அடையாளப்படுத்திக் கொள்ளாததால்அச்சிறுவனுக்கு உணவுப்பண்டங்கள் வாங்கிக் கொடுத்துஒவ்வொரு வார்டாக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, மகப்பேறு வார்டில் இருந்த தனது தாயை அடையாளம் காட்டிய பிறகுஅச்சிறுவன் மணிகண்டன் - ருக்மணி தம்பதியின் மகன் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து,மாயமான சிறுவனை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த காவலரைமருத்துவமனையில் இருந்த அனைவரும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி, குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறுபோலீசார் அங்கிருந்தவர்களிடமும் அறிவுறுத்திவிட்டுச் சென்றுள்ளார்.

hospital police Coimbatore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe